LOADING

Type to search

சினிமா

‘ஜன நாயகன்’ படம் ஜன. 14ம் தேதி வெளியீடு?

Share

விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் ‘ஜன நாயகன்’. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் வெளியீடு தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் போகி பண்டிகை அன்று அதாவது வருகிற 14-ந்தேதி படத்தை வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.