ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார்
Share
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டில்லியில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.




















