LOADING

Type to search

உலக அரசியல்

ஜெர்மனி: 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கண்டெடுப்பு

Share

ஜெர்மனியின் கலோன் நகரில் 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டன. சாலை கட்டமைப்பு பணியின்போது இந்த வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தன. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் நகரில் இருந்து நேற்று வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். அவற்றை செயலிழக்க செய்யும் பணிக்காக நகரில் உள்ள 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். இதற்காக வீடுகள், 58 ஓட்டல்கள், 9 பள்ளிகள், மருத்துவமனை ஒன்று மற்றும் 2 நர்சிங் ஹோம்கள், பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஒரு மணிநேரத்தில் அந்த குண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன என அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. போர் முடிந்து 80 ஆண்டுகள் ஆன பின்னரும், வெடிக்காத குண்டுகள் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.