ஜேர்மனியிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கோப்பாய் வாசி ஒருவர் கிருமியின் தாக்கத்தால் உயிரிழப்பு!
Share
பு.கஜிந்தன்
ஜேர்மனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவர் கிருமி தாக்கத்தினால் நேற்றையதினம் (02) உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியில் வசித்து வந்த நடராசா கேதீஸ்வரநாதன் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த ஜனவரி மாதம் ஜேர்மனியில் இருந்து வருகை தந்து கோப்பாய் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு 2ம் திகதி அன்றையதினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். இனங்காண முடியாத கிருமித் தாக்கத்தினால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.




















