LOADING

Type to search

சினிமா

’டாக்ஸிக்’ படத்தில் ருக்மணி வசந்த் பதாகை வெளியீடு

Share

நடிகர் யாஷ் தனது 19-வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல நடிகை கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் வருகிற மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து, கியாரா அத்வானி, நயன்தாரா மற்றும் ஹுமா குரேஷி ஆகியோரின் முதல்காட்சி பதாகைகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், நடிகை ருக்மணி வசந்தின் முதல்காட்சி பதாகை தற்போது வெளியாகி இருக்கிறது. இது கவனத்தை ஈர்த்து வருகிறது.