LOADING

Type to search

சினிமா

டியூட் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய திருமாவளவன், முத்தரசன்

Share

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17-ந்தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டியூட் படம், வசூலை குவித்து வருகிறது.

தன் மாமன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய தயாராகும் நாயகனுக்கு, அப்பெண்ணுக்கு வேறொருவர் பிடித்திருப்பது தெரிந்தும் திருமணம் செய்து பின்னர், அப்பெண்ணை அவரது காதலனுடன் சேர்த்து வைக்க நாயகன் பாடுபடுவதும், அதன்பின் நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க நாயகி பாடுபடுவதும் என சாதிக்கு எதிராக படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ‘டியூட்’ திரைப்படத்தைப் சிறப்புக் காட்சியை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், முன்னாள் மாநிலச் செலயாளர் முத்தரசன் ஆகியோர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது படத்தின் இயக்குநர் கீர்த்திஸ்வரன், கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.