LOADING

Type to search

கனடா அரசியல்

தனது பிறந்த நாளில் இரண்டு சமூகப் பணிகளுக்கு குடும்பம் சார்ந்த நிதி அன்பளிப்பு வழங்கிய கனடா வர்த்தகர் கிருஸ்ணகோபால் செல்லத்துரை

Share

கனடாவில் தனது முன்னேற்றமான வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் சமூகப் பணிகள் ஆகியவற்றின் மூலம் நன்கு அறியப்பெற்றவராக விளங்கும் நண்பர் கிருஸ்ணகோபால் செல்லத்துரை அவர்களின் 65வது பிறந்தநாள் விழா அவரது குடும்பத்தினர் சார்பில் சிறப்பான ஏற்பாடுகளோடு ஸ்காபுறோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 29ம் திகதி கொண்டாடப்பெற்றது.

அன்றைய தினம் அங்கு கலந்து கொண்ட அனைவராலும் பாராட்டப்பெற்ற அம்சங்களின் முக்கியமான இரண்டு நிதி அன்பளிப்புக்கள் இன்றும் பேசப்பெற்று வருகின்றன.

முதலாவது நிதி அன்பளிப்பாக தற்போது திட்டமிடப்பெற்று வரும் கனடாவில் அமையப் போகின்ற ‘தமிழர் சமூக மையம்’ ( Scarborough Tamil Community Centre ) நிதிக்காக கிருஸ்ணகோபால் செல்லத்துரை அவர்களது குடும்பத்தினர் வழங்கிய பத்தாயிரம் கனடிய டாலர்களுக்குரிய மாதிரிக் காசோலை ‘தமிழர் சமூக மையம்’ நிதிக்குழுவின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பெற்றது.

மேலும். இரண்டாவது நிதி அன்பளிப்பாக தற்போது கிழக்கிலங்கையில் கனடா- முன்னாள் இலங்கை வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பெற்று வரும் வீடற்றவர்களான பத்து வீட்டுத் திட்டத்தில் அடங்கும் ஒரு வீட்டுக்கான செலவுத் தொகையான ஐயாயிரம் கனடிய டாலர்கள் பெறுமதியான மாதிரிக் காசோலை கனடா- முன்னாள் இலங்கை வர்த்தகர்கள் சங்கத்தின் முக்கிய இயக்குனர்களிடம் மேடையில் கையளிக்கப்பெற்றது