LOADING

Type to search

சினிமா

தனுஷின் 55வது படத்தின் கதாநாயகி ஸ்ரீ லீலா

Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’. “தேரே இஸ்க் மெய்ன்” ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, போர்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. ‘கர’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ், ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55 படத்தில் நடிக்க உள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆகேடேக்ஸ்டியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தனுஷ் 55 என்ற டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தனுஷின் 55வது படத்தின் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.