LOADING

Type to search

சினிமா

தனுஷ்-ன் “இட்லி கடை” படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Share

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் வெளியீடு ஆகிறது. படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. படத்தின் முன்னோட்டத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதன்படி, கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.