தமது அரசாங்கம் ஒன்ராறியோவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதை மேலும் எளிதாக்குகிறது என்கிறார் எம்பிபி விஜய் தணிகாசலம்
Share
ஒன்ராறியோ அரசு, முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு 8% மாநில இணக்கமான விற்பனை வரியை (HST) முழுமையாகத் திருப்பித் தரும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ரொறன்ரோ மற்றும் ஸ்காபரோ முழுவதும் பல குடும்பங்களுக்கு தாம் சொந்தமாக வீடு வாங்கும் கனவை நனவாக்க உதவும். புதிய வீடு வாங்குபவர்களுக்கு இது அதிகபட்சம் 80,000 டொலர்கள் வரை சேமிக்க உதவும்.
“ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் வேலை செய்கின்ற, படிக்கின்ற, மற்றும் குழந்தைகளை வளர்க்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் ஒரு வீட்டை வாங்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். இந்த வரி மீளளிப்பு அக்கனவை ரொறன்ரோ வாழ் மக்களுக்கு நனவாக்குகிறது” என அமைச்சர் விஜய் தணிகாசலம் கூறினார்.
இத்திட்டம் வீடு வாங்குவதை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் கட்டுமானத் துறைக்கும் ஆதரவாக இருந்து, ஸ்காபரோவின் வளர்ந்து வரும் பகுதிகளை மேலும் வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.




















