LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழக ஆளுனராக ஆர்.வி.ஆா்லேகர் 12-ந்தேதி பதவி ஏற்பு

Share

தமிழக ஆளுனர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுனர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு அதிபர் உத்தரவிட்டாா். இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக ஆளுனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் செல்கிறாா். அவரை ஆளுனர் மாளிகை அதிகாரிகளும், ஊழியா்களும் வழியனுப்பி வைக்கின்றனா். இதையடுத்து தமிழக ஆளுனராக கூடுதல் பொறுப்பேற்கும் ஆா்.வி.ஆா்லேகா் 12-ந்தேதி மதியம் 12 மணியளவில் பதவி ஏற்கிறாா். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தா்மாதிகாரி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறாா். இந்தப் பதவி ஏற்பு நிகழ்வு எளிமையாக நடைபெற உள்ளது.