LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழின சொந்தங்களான நம்மை மொழியும், இனமும் உணர்வால் இணைக்கிறது – மு.க.ஸ்டாலின்

Share

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது நாளாக நடைபெறும் அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: நாடுகளும், கடல்களும் பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. திராவிட மாடல் அரசு அமைந்ததும் அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் வாழ்க்கை தேடிச் சென்றவர்கள் இல்லை, அந்த நாடுகளை வளப்படுத்த சென்றவர்கள். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டை அயலகத் தமிழர்கள் மறக்கவில்லை. நம்மை யாராலும் எதனாலும் பிரிக்கமுடியாது. பல்லாயிரம் ஆண்டு கால சொந்தம், இன்னும் பல ஆண்டுகள் தொடரும் சொந்தம். வாழ்வதும், வளர்வதும் தமிழனும், தமிழுமாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம். வெளிநாடுகளிலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இலங்கையில் அறிமுகமாகும் புதிய அரசியலமைப்பு சட்டத்தால் தமிழர்களின் உரிமை பாதிக்கக்கூடாது என வலிறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். மொழி உரிமை காக்க தங்கள் உயிரை தந்தவர்களை கொண்ட இயக்கம் தி.மு.க. தமிழர்கள் கனவு கண்டால் அது நிறைவேறும். 2030-ம் ஆண்டை மனதில் வைத்து உங்க கனவ சொல்லுங்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.