LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்த பேத்தியார் உயிரிழந்துள்ளார்.

Share

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.

இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி 18 ம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை வைத்திசாலையில் பார்வையிட்டு வந்த நிலையில் இத்துயரச் செய்தி இரவு வந்தது.

தந்தையார் சிறையில் வாடுகின்ற நிலையில், பேத்தியும் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் சிறுவர்களாக இருக்கும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு மாத்திரமின்றி தமிழ் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.