தர்ஷன் நடிக்கும் `காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
Share
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகையாகும். இப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், மற்றும் பலர் நடிக்கின்றனர்.இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது “காட்ஸ்ஜில்லா” திரைப்படம். சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ். பூஜை விழாவில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு , பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ். கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், கேபிஒய் வினோத், பிளாக் பாண்டி, பிஜிஎஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழு விவரம்:ஒளிப்பதிவு – சிவராஜ்படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த்இசை – கார்த்திக் ஹர்ஷாகலை இயக்கம் – சௌரப் கேசவ்தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.




















