LOADING

Type to search

இலங்கை அரசியல்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி அகழ்வுப் பணி!

Share

பு.கஜிந்தன்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.