LOADING

Type to search

இலங்கை அரசியல்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

Share

(மன்னார் நிருபர்)

(29-10-2023)

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து சனிக்கிழமை (28) இரவு கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் பதில் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் மலேரியா பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த 23 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 09ம் திகதி வரை (09-11-2023) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.