LOADING

Type to search

உலக அரசியல்

தாய்லாந்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Share

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி லேண்டிங் ஆனது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் முன்புற சக்கரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விமானம் ஆபத்தான நிலையை எதிர்கொண்டது. எனினும் விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தையடுத்து உடனடியாக புக்கெட் விமான நிலையத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விமானம் தரையிறங்கும் போது ஓடுதளம் சேதமடைந்தது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத நிகழ்வால் பயணிகள் பீதி அடைந்தனர்.