LOADING

Type to search

இலங்கை அரசியல்

திருகோணமலையில் ‘இனிய நந்தவனம்’ இலங்கை சிறப்பிதழ் சஞ்சிகை வெளியீடு

Share

வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இனிய நந்தவனம் சஞ்சிகையின் இலங்கை சிறப்பிதழ் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு, வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் அரசரத்தினம் அச்சுதனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ச.திருச்செந்தூரன், கவிஞர் க.யோகானந்தம், கவிஞர் தில்லைநாதன் பவித்ரன் உள்ளிட்டோர் உரையாற்றியிருந்தனர்.

இந்நிகழ்வில்,திருகோணமலையை சேர்ந்த அனாமிகா பண்பாட்டு மையத்தின் நிறுவுனர் பேராசிரியர் பாலசிங்கம் சுகுமார், வீரகேசரி பத்திரிகையின் முன்னாள் சிரேஷ;ட உதவியாசிரியர் கந்தையா சிவராசா, கெப்பிட்டல் வானொலியின் முன்னாள் சிரேஷ;ட நிகழ்ச்சி முகாமையாளர் தில்லையம்பலம் தரணீதரன் உள்ளிட்டோர் கலைக்கேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நிறைவாக இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்