LOADING

Type to search

சினிமா

திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கிச்சா சுதீப்

Share

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ, அருந்ததி, புலி ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் பதிந்தார். இவரது நடிப்பில் வெளியான ‘மேக்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கினார். விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப்பின் 47- வது திரைப்படமாக ‘மார்க்’ வெளியானது. கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப் தன் அறிமுக திரைப்படங்களில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் தமிழில் வெளியான சேது திரைப்படத்தைக் கன்னடத்திற்கு குச்சா என்கிற பெயரில் மறுபதிப்பு செய்து நடித்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றார். சுதீப்பின் நடிப்பில் குச்சா, நந்தி, கிச்சா, மை ஆட்டோகிராப் ஆகிய திரைப்படங்கள் முன்னணி கதாநாயகனாக அவரை மாற்றியது. இந்நிலையில், பன்முகத் திறமை கொண்ட கிச்சா சுதீப் இன்றுடன் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதனை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருவதுடன் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கர்நாடக புல்டோசர்ஸ் நட்சத்திர கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இன்று நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் துவக்கத்தில் கிச்சா சுதீப்புக்கு கேக் வெட்டி சக நடிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.