LOADING

Type to search

இந்திய அரசியல்

தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும் – விஜய்

Share

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். மேலும் நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும் தான் அதற்கு ஒரு மிக முக்கிய காரணம். உங்களை நம்பிதான் நானும், நம்ம கட்சியும் இருக்கிறோம். நம் கட்சியில் இருக்கிற தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்த கட்சியின் தலைமை தொண்டனான என்னுடைய வாழ்த்துகள். 1977-ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கிற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று சொன்னார். அதே மாதிரி 2017-ம் ஆண்டுக்கு அப்புறம் 2021-க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்த்த நமது தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம். எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, ஏன்? ஜெயித்த பிறகு சட்டசபையில் கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம். ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது. புரட்சி தலைவர்னு ஒருத்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் கேலி, கிண்டல் செய்தனர். அதன்படி யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படி கொந்தளிப்பதுதான் அவர்களுக்கு வேலையே. நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா?

இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.தான் மக்களின் ஒரே ஆப்சன். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நம்ம த.வெ.க.தான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு இன்னும் இன்னும் ஷார்ப்பா வேலை பாருங்கள். நம்முடைய வேட்பாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நம்முடைய விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது மட்டும் தான் உங்கள் வேலை. மாற்றத்தை யெல்லாம் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் விசிலை ஊதுகிற ஊதலில் இந்த தீயசக்தியும், இந்த ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளுடன் நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேணும். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.