LOADING

Type to search

இலங்கை அரசியல்

துரோகியே வெளியேறு – செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட C.V.K சிவஞானம்!

Share

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் 25ம் திகதி அன்றையதினம் செம்மணியில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்றவேளை அங்கிருந்த போராட்டக்காரர்களால் விரட்டியடிக்கப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி அணையா விளக்கு போராட்டமானது கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றுவரை நடைபெற்று வருகிறது.

குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சென்றவேளை அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அவரை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து அவரை விரட்டியடித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.