LOADING

Type to search

இந்திய அரசியல்

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: தமிழ்நாட்டில் ரூ.42.65 கோடி பறிமுதல்!

Share

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதனடிப்படையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் தங்கம், வெள்ளி, மற்றும் பணம் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கிடமான பெரிய அளவிலான வங்கிப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போதுவரை தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர். 18 மார்ச் 2026 அன்றைய நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மதிப்பு ரூ.42.65 கோடி ஆகும்.