நடிகர் அஜித் அவர்களுக்கு நன்றி – உதயநிதி ஸ்டாலின்
Share
எஸ்.டி.ஏ.டி. லோகோவை பயன்படுத்தியதற்காக தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் குழு பங்கேற்றுள்ளது. இந்தநிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நடிகரும் – நண்பருமான அஜித்குமார் சாரின் 2025-இல் ஒட்டுமொத்தமாக மூன்றாம் இடம் பிடித்தது அறிந்து மகிழ்ந்தோம். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் பெருமையடையச் செய்துள்ள அஜித் சாருக்கும்- அவருடைய குழுவினருக்கும் நம்முடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சர்வதேச போட்டியின் போது, நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் லோகோ-வை, கார் – ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கட்டும் என அதில் பதிவிட்டுள்ளார்.




















