LOADING

Type to search

சினிமா

நடிகர் தனுஷின் ‘கர’ பட வெளியீடு தேதி அறிவிப்பு

Share

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தேரே இஷ்க் மே’. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ‘கர’ என பெயரிடப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ‘கர’ திரைப்படம் வருகிற ஏப்ரம் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.