LOADING

Type to search

சினிமா

நடிகர் வெற்றியின் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Share

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில், ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ள படம் ‘பிளாக் கோல்டு’. “எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஒரு வாலிபனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே இப்படத்தின் மையக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக கடந்து செல்லும் ஒரு விசயம், எப்படி உலக அளவிலான வணிகமாக மாறியது என்பதை இதுவரை கண்டிராத புதுமையான கதைக்களத்தில் தயாராகி உள்ளது. அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் நாயகனாக வெற்றி நடிக்க, பிரியாலயா நாயகியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, ஏ.வெங்கடேஷ், அருள் டி. சங்கர், விஜய் டிவி ராமர், ஜீவா ரவி, அஜித் விக்னேஷ், கராத்தே வெங்கடேஷ், ஜப்பான் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் படத்தின் முன்னோட்டமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.