LOADING

Type to search

இலங்கை அரசியல்

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடத்தப்பெற்ற இந்திய கலைஞர்களின் வள்ளிக் கும்மி நடனம்!

Share

பு.கஜிந்தன்

தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளிக்கும்மி நடனமானது 4ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் நல்லூர் சிவகுருணத்தில் ஆற்றப்பெற்றது.

நேற்றையதினம் தமிழகத்திலிருந்து காங்கேசன்துறை ஊடாக 150க்கும் அதிகமானோர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் 65 கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி நடனத்தை ஆற்றினார்கள்.

இரு நாடுகளுக்கு இடையிலான இன நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கிலும் தென்னிந்தியாவின் பாரம்பரிய கலையை ஈழத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்க்கும் முகமாகவும் இந்த பள்ளிக்கு நடனம் ஆற்றப்பட்டது.

சிவகுரு ஆதீனத்தினத்தினர், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர் பல நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர்.