LOADING

Type to search

இந்திய அரசியல்

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

Share

டில்லியில் நாடாளுமன்றத்திற்குள் சுவர் ஏறிக்குதித்து அத்துமீறி நுழைந்த நபரை காவல்துறை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்றத்திற்குள் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்துள்ளார்.

காலை 6.30 மணியளவில் ரயில் பவன் அருகே உள்ள சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து, கருடா நுழைவு வாயில் அருகே சென்றுள்ளார். இதனைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.