நுவரெலியாவில் உள்ள சுற்றுலாவிற்குரிய அபாயகரமான உலக முடிவிடத்தில் (World’s End) செல்பி எடுத்தபோது தவறி விழுந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி மீட்கப்பட்ட அதிசயம்
Share
நுவரெலியாவில் உள்ள ஹோர்டன் சமவெளி தேசிய பூங்காவில் அமைந்துள்ள ‘உலக முடிவு’ (World’s End) 1,200 மீட்டருக்கும் (4,000 அடி) அதிகமான செங்குத்தான சரிவைக் கொண்ட ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகும். இது பனி மூடிய புல்வெளி, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மேகக் காடுகள் வழியாகச் செல்லும் ஒரு அற்புதமான ட்ரெக்கிங் பாதையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெற்படி ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து 19ம் திகதி வியாழக்கிழமை அன்று (19-03-2026) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்
கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா, ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதோ குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்ததுடன், அவரை மீட்க பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் நாடினார்.
அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3 ஆவது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர், வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.
இந்த பல்கலைக் கழக மாணவி உயிர் தப்பியமை ஒரு அதிசயம் என்று இலங்கையில் அனைத்து பகுதி மக்களும் பேசிக் கொள்கிறார்கள் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார.




















