LOADING

Type to search

கனடா அரசியல்

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா நடாத்திய ‘மாவிலி வசந்தம் 2025’ கலைவிழா சிறப்புக்களுடன் நடைபெற்றது

Share

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா நடாத்திய மாவிலி வசந்தம் 2025 கலைவிழா நிகழ்வும், நூல் வெளியீடும் Oct 11, 2025 அன்று 22 Esana Park Drive, Markham இல் அமைந்துள்ள Peoples Theatre for the Performing Arts உள்ளக கலையரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழரின் பாரம்பரியக் கலைகள் பல மேடையேறி நிகழ்வை மெருகூட்டியது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்திருந்தது . கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற மாவிலி வசந்தம் விழாவிற்கு பெருமளவு மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

இங்கே காணப்படும் படங்கள் அங்கே எடுக்கப்பெற்ற்தாகும். மேற்படி நிகழ்வில் ஸ்காபுறோவில் அமையவுள்ள தமிழர் சமூக மையத்தின் கட்டட நிதிக்காக ஒன்றிய அங்கத்தவர்கள் சார்பில் 10000 டாலர்கள் வழங்கப்பெற்றன என்பது பாராட்டுக்குரியது