LOADING

Type to search

உலக அரசியல்

நைஜீரியா: ஆயுதக்குழுவினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 46 பேர் பலி

Share

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பொர்கு நகரில் உள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆயுத கும்பல் நுழைந்தது. மேலும், கிராமங்களில் உள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

அதேபோல், கிராமங்களில் இருந்து 20க்கும் மேற்பட்டோரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர், கடத்தி செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.