LOADING

Type to search

சினிமா

“பராசக்தி” படத்தின் முதல் பாடல் வெளியீடு

Share

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ‘பராசக்தி’ படத்தின் பாடல் உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ‘பராசக்தி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அடி அலையே’ வெளியிடப்பட்டுள்ளது. சான் ரோல்டன், தீ குரலில் ஏகாதசி வரிகளில் ஜிவி பிரகாஷ் இசையில் சிவகார்த்திகயேன் – ஸ்ரீலீலா இடையேயான காதல் பாடலாக இது உருவாகி உள்ளது.