LOADING

Type to search

சினிமா

‘பராசக்தி’ பட முன்னோட்டத்தை பாராட்டிய ரிஷப் ஷெட்டி

Share

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று யூடியூபில் கொஞ்ச நேரத்திலேயே அதிக வியூஸ்களை அள்ளியது. இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும், வசனமும் உணர்ச்சிபூர்வமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த நிலையில், காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ரிஷப் ஷெட்டி பராசக்தி படத்தின் முன்னோட்டத்தை பாராட்டியும், படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.