LOADING

Type to search

சினிமா

பல்டி படத்தில் செல்வராகவனின் கதாப்பாத்திர அறிமுக பதாகை வெளியீடு

Share

பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் , மெட்ராஸ்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகாம். இவர் தற்போது தனது 25-வது படமான பல்டி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கிய இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகி உள்ளது. இப்படத்தில் இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இது கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான செல்வராகவனின் கதாபாத்திர அறிமுக பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் செல்வராகவ “போர்த்தமரை பைரவன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.