LOADING

Type to search

சினிமா

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

Share

நடிகர் தர்மேந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதனிடையே, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள் தர்மேந்திராவை காண அவரது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் தர்மேந்திரா வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.