LOADING

Type to search

கனடா அரசியல்

பிக்கரிங் அருள் ஜோதி சிவனாலய நவராத்திரி விழாவில் `நாதவீணா நுண்கலைக் கல்லூரி` மாணவிகளின் வீணைக் கச்சேரி மெய்சிலிர்க்க வைத்தது.

Share

1734 Orangebrook Ct Unit 10, Pickering, ON L1W 3G8 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள பிக்கரிங் அருள் ஜோதி சிவனாலயத்தில் கடந்த28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நவராத்திரி விழாவில் `நாதவீணா நுண்கலைக் கல்லூரி` மாணவிகளின் வீணைக் கச்சேரி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையாகாது.

திருமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தியின் மாணவிகளில் வெவ்வேறு வயதுப் பிரிவுகளைக் கொண்ட பலர் மேடையில் சில மணிநேரங்கள் வழங்கிய வீணைக் கச்சேரி அவர்களது திறமைகளையும் ஆசிரியையின் கற்பித்திறனையும் எடுத்தியம்பின.

விசேட அபிசேகங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியன நடைபெற்ற பின்னர் மேற்படி வீணை இசைக் கச்சேரிகள் இடம்பெற்றன.

தொடர்ந்து அதில் பங்குபற்றிய மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகியோருக்கு ஆலயநிர்வாகத்தின் சார்பில் சிவஶ்ரீ குருஜீ சோமஸ்க் கந்தக்குருக்கள் அவர்கள் பாராட்டுப் பத்திரங்களையும் கௌரவத்தையும் வழங்கினார்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் ஆகியோர் அங்கு சமூகமளித்திருந்தனர்.

படங்களும் செய்தியும்:- சத்தியன்