“பின்னணி குரல்” சங்க தலைவராக பதவியேற்ற ராதாரவி
Share
சினிமா டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் (2026-29) ராதாரவி தலைமையிலான அணி போட்டியிட் டது. ஆனால் அந்த அணியை எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாத நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ராதாரவி அணியை சேர்ந்த 23 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி தலைவராக ராதாரவி, பொதுச்செயலாளராக டி.என்.பி.கதிரவன், பொருளாளராக ஏ.ஷாஜிதா, துணைத்தலைவர்களாக துர்கா சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், கே.மாலா, இணைச்செயலாளர்களாக குமரன், முரளி, சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல செயற்குழு உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.




















