LOADING

Type to search

இலங்கை அரசியல்

பொது விடயங்களை உரிய முறையில் தெரியப்படுத்துவதில்லை என மானிப்பாய் பிரதேச சபையில் குற்றச்சாட்டு!

Share

பொது விடயங்களை உரிய முறையில் தமக்கு தெரியப்படுத்தப்படுவதும் இலலை, உரிய முறையில் அழைப்பு விடுப்பதும் இல்லை என மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

19ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சபையின் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்ற சபை அமர்வின் போது அவர்கள் இந்த விடயத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். இது குறித்து தமிழரசு கட்சியின் உறுப்பினர் சு.வாகீசன் கருத்து தெரிவிக்கையில்,

பிரதேச சபை சார்ந்த விடயங்கள், அல்லது போட்டிகள் ஏதாவது நடைபெற உள்ளது என்றால் எமக்கு அதனை அறிய தாருங்கள். என்னிடம் வழங்கினால் கூட நான் உரியவர்களுக்கு அனுப்பி வைப்பேன் அல்லது பிரதேச சபை உறுப்பினர்களின் குழுவில் பகிர்வேன்.

பிரதேச சபையால் ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு தொடர்பாக தாமதமாக தெரியப்படுத்தியதால் அந்த நிகழ்வுக்கு வருகை தர முடியவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது ஏற்றுக்கொள்ள கூடிய விடயம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறு செயற்படுவதை தவிர்த்தால் நல்லது என்றார்.

மேலும், நடைபெற்று முடிந்த, பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பாக தமக்குத் தெரியப்படுத்தவில்லை எனவும், அதனை தெரியப்படுத்தி இருந்தால் தாங்களும் அந்த விளையாட்டில் பங்குபற்றி இருக்கலாம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.