LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மாபாவின் 35 வது தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Share

(கனகராசா சரவணன்;)

படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவின் 35 வது தியாகிகள் தினத்தையிட்டு ‘தியாகிகளின் சமாதிகளே ஆராதனைக்குரிய தேவாலயங்கள்’ எனும் தொனிப்பொருளில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் 21ம் திகதி அன்று சனிக்கிழமை (21) கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது இதில் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவரான பத்மநாபாவின் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப். சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளருமான கோவிந்தன் கருணாகரம், ஜனநாயக தமிழ் கூட்டமைப்பின் ஏறாவூர் நகரசபையின் பிரதி தவிசாளர் ஞா.கஜேந்திரன், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள், உயிர் நீத்த தியாகிகளின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர் தோழர் பத்மநாபாபின் திருஉருவ படத்திற்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மலர்மாலை அணிவித்து பொது சுடர் ஏற்றினர் இதனை தொடர்ந்து நினைவேந்தலில் பங்கெடுத்து கொண்;ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர்.