LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் திருடனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 30 வரை விளக்கமறியல்

Share

(கனகராசா சரவணன்)

மட்டு சின்ன ஊறணி (வன்னியில்) பகுதியில் திருடன் ஒருவனை கைது செய்ய சென்ற பொலிசார் மீது கத்துகுத்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 5 பேரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு 26ம் திகதி அன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக வன்னி என அழைக்கப்படும் சின்ன ஊறணி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரை அவனது வீட்டில் வைத்து 25ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் கைது செய்ய முயற்சித்த இரு பொலிசார் மீது சந்தேக நபர் மற்றும் இரு பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட கழுவினர் கத்தியால் குத்தியும் பொல்லுகளால் அடித்து தாக்குதலை மேற்கொண்டனர்.

இதன்போது இரு பொலிசார் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டு தப்பி ஓடி தலை மறைவாகிய பிரதான சந்தேகநபரான திருடன் உட்பட 3 ஆண்கள் இரு பெண்கள் என 5 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை 26ம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 30 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.