மட்டக்களப்பு மாவட்டத்தின் 39 வீத நிலம் வன வளத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்!
Share
ந.லோகதயாளன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் ஆளுகையில் மட்டும் 1,13,016 கெக்டேயர் நிலம் உள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் திணைக்களங்கள் வசம் உள்ள நிலங்களின் அளவு தொடர்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்திற்கு வழங்கிய பதிலிலேயே இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கிய பதிலில் இரண்டு லட்சத்து 85 ஆயிரத்து 400 கெக்டேயர் நிலப்பரப்பு கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 16 கெக்டேயர் நிலம் வன வளத் திணைக்களத்திடம் உள்ளதாக அந்த திணைக்களம் எழுத்தில் பதிலளித்துள்ளது.
இந்த அளவானது மாவட்ட மொத்த நிலப்பரப்பின் 39 வீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.




















