LOADING

Type to search

இந்திய அரசியல்

மனுஜோதி ஆசிரமத்தில் தேவாசீர் லாறி இல்லத் திருமண விழா

Share

செப்டம்பர் 18-ம் தேதி மாலை 5 மணி அளவில் மனுஜோதி ஆசிரமத்தின் தலைவர் திரு. பால் உப்பாஸ் என். லாறி அவர்களது மூத்த மகளான ஹவிலா நட்சத்திரம் தேஜஸ்ரீ மற்றும் ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த மணமகன் ஹரி கிருஷ்ணாவின் திருமண விழா நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு. மீனாட்சி சுந்தரம் மணமக்களை வாழ்த்தி பேசினார். தேவாசீர் லாறி குடும்பத்தின் சார்பாக, பால் உப்பாஸ் N. லாறி திருமணத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இத் திருமண நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள், மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலேசிய பேரவை அங்கத்தினர் மணமக்களை வாழ்த்தினர்.