LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் தென் கடலில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

Share

மன்னார் தென் கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து உயிரிழந்த ஆமைகளை மீட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் நேற்று (16) அப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக ஆமைகள் கரையில் ஒதுங்கி வருவதுடன் மேலும் ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.