LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘மாங்கனித் தீவான இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் கடும் வெள்ளத்தினால் அதிக உயிரிழப்புக்களும் சொத்துக்களிற்கான சேதங்களும்..!

Share

(மன்னார் நிருபர்)

(29-11-2025)

மன்னார் கட்டுக்கரை குளத்தின் வான் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதோடு வான்பகுதி பாதிப்படையும் ஆபத்து இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கு அமைவாக பரப்புக்கடந்தான் அடம்பன் தாழ்வு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பதோடு பாதுகாப்பு தேவையின் பொருட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறும் குறித்த விடயம் தொடர்பாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.