LOADING

Type to search

இலங்கை அரசியல்

முதன் முதலாக யாழ்ப்பாணம் வந்த மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள்

Share

பு.கஜிந்தன்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டனர்.

இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 70 ஆதினவாசிகள் குழுவினரே முதல் தடவையாக வந்து ள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்கான விருந்தோம்பல் நிகழ்வு நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பிரசித்தி பெற்ற இடங்களான யாழ்ப்பாணம் மத்திய நாகவிகாரைக்கும்,நயினாதீவு நாகதீபம் விகாரைக்கும், சென்று வழிபாடுகள் செய்துவிட்டு, வரலாற்று சின்னங்களையும் சுற்றி பார்வையிட்ட பின்ன மீண்டும் தமது இருப்பிடமான மஹியங்கனைக்கு செல்லயுள்ளனர்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரட்ன, பொலிஸார், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.