LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவில் உழவு இயந்திரம் விபத்து – நான்கு மாணவர் காயம்!

Share

முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு போர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் பாடசாலை மாணவர்கள் பொருட்களை ஏற்றுவதற்காக உழவு இயந்திரத்தில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் அதில் பயணம் செய்த நான்கு மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.

இவ்வாறு விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தை பாடசாலை மாணவர்கள் செலுத்தினார்களா என்ற சந்தேகம் எழும் நிலையில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.