LOADING

Type to search

இலங்கை அரசியல்

முல்லைத்தீவு புலிபாய்ந்தகல்லில் சிங்கள மீனவர்களிற்கு தொழில் செய்ய அனுமதி வழங்கயுள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர்

Share

ந.லோகதயாளன்.

முல்லைத்தீவு புலிபாய்ந்தகல் கடற்கரையில் சிங்கள மீனவர்களிற்கு தொழில் புரிய அனுமதி வழங்க கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் அறிவித்தலை வழங்கியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்மின் வெலிஓயா பிரதேசத்தில் வசிக்கும் நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்கள் குளத்து நீர் வற்றுக் காலத்தில் பாதிப்பதாக்கூறி கடல் மீன்பிடிக்கு அனுமதி வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அனுமதிக்கான கடிதம் 05-08-2025 அன்று செவ்வாய்க்கிழமை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பணிப்பாளரால் ஒப்பமிடப்பட்ட கடிதம் மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிரதி வெலிஓயா கிராமப்புர மீனவர் அமைப்பின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெலிஓயா கிராம்ப்புர மீனவர் அமைப்பினே வெலிஓயாவில் உள்ள குளங்கள் வற்றுக் காலத்தில் அனுமதியின்றி அத்துமீறிய வகையில் தண்ணிமுறிப்புக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட முயலும் சந்தர்ப்பங்களில் தண்ணிமுறிப்புக் குளத்தில் அனுமதியுடன் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுடன் முரன்பாடு ஏற்படுவதும் தொடராகவுள்ளது.

இவ்வாறு தண்ணிமுறிப்பில் ஏற்படும் பிரச்சணையை காரணம் காண்பித்து வெலிஓயாவில் வசிக்கும் சிங்கள மீனவ்களிற்கு 15 மைல் தொலைவில் உள்ள தமிழ் மீனவர்களின் பிரதேசத்தில் அனுமதி வழங்கப்பட்டமை திட்டமிட்ட இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் என உள்ளூர் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்