மொன்றியால் வாழ் சில ‘கனடா உதயன்’ நண்பர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நடைபெற்ற சிறு சந்திப்பு
Share
கடந்த செவ்வாய்க்கிழமையன்று 1ம் திகதி கனடிய தேசத்தின் பிறந்த நாளாக இருந்தாலும் கனடா வாழ் தமிழ்’ மக்களின் இரண்டாவது தளமாகத் திகழும் மொன்றியால் நகருக்கு நண்பர் ஶ்ரீஸ்கந்தராஜா அவர்களுடன் பயணித்திருந்தோம்.


கனடா உதயன் நிறுவனம் ரொறன்ரோவில் நடத்தும் எந்தவொரு விழாவாக இருந்தாலும் அதற்கு நேரடியாக வருகை தந்தும் ஆதரவை வழங்கியும் பக்கத்துணையாக விளங்கும் நண்பர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக இருந்தது.
இங்கே காணப்படும் படத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ஜுண். வர்த்தகப் பிரமுகரும் ஏஎம்ஆர் நிறுவனத்தின் அதிபருமான ஏ. எம். ராஜ்கோபால். இவ்வருடத்தின் வர்த்தக வெற்றியாளர் (கியுபெக்) விருது பெற்ற தங்கா இளையதம்பி மற்றும் துர்க்கா பேணிச்சர் நண்பர் ஶ்ரீஸ்கந்தராஜா (ஶ்ரீ) ஆகியோருடன் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் காணப்படுகின்றார்
செய்தியும் படமும்:- சத்தியன்




















