LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழில் எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் உயிரிழப்பு!

Share

யாழ்ப்பாணத்தில், எலிக்காய்ச்சல் காரணமாக சிறுவன் ஒருவன் 26ம் திகதி அன்றையதினம் (26-11-2025) உயிரிழந்துள்ளான். அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியை சேர்ந்த பிரதீபன் டக்சிகன் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த 22ஆம் திகதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலை குணப்படுத்த தாயார் கை வைத்தியம் செய்துள்ளார். பின்னர் காய்ச்சல் வீரியமான நிலையில் 25ஆம் திகதி சிறுவனை மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 26ம் திகதி அன்றிரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். எலிக்காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.