LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ள விவசாயிகளுக்கான பயிற்சிப் பட்டறை

Share

இந்திய விவசாய ஆர்வலர்திருமதி மாரிமுத்து ரேவதி அம்மையார் செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை நடாத்தவுள்ளார்.

உயிர்த்தெழும் பூமி வேளாண்மை என்னும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் திருநெல்வேலியில் நாளை புதன்கிழமை மற்றும் நாளைமறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

வடமாகாண பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அஞ்சனா தேவி ஸ்ரீ ரங்கன் தலைமையில் ஆளவாழ்தல் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையுடன் இருநாள் தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறை நடைபெறவுள்ளது.

இத்தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறைக்கு வளவாளராக இந்திய விவசாய ஆர்வலரும், 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக விவசாயம் தொடர்பான களவிஜயம் மேற்கொண்டதுடன் பல சர்வதேச பல்கலைகழகங்களில் சூழல்நேயமான நிலைபேறான விவசாய செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகளை மேற்கொண்டு வருபவருமான திருமதி மாரிமுத்து ரேவதி அம்மையார் அவர்கள் கலந்து செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை நடாத்தவுள்ளார்.

குறித்த நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து கொள்ளவுள்ளார்.

இப்பயிற்சி பட்டறையில் மண்ணைப் புதுப்பித்தல், நீர் முகாமைத்துவம், வினைத்திறனான சக்திப்பயன்பாடு, பயிர் முகாமைத்துவம், அறுவடையும் அறுவடைக்குப்பின்னரான தொழில்நுட்பங்கள், சந்தை முகாமைத்துவம் என பலகோணங்களில் புத்துயிர்ப்பூட்டும் விவசாயக் கருத்துக்களை விவசாய ஆர்வலர்களுக்கு வழங்கவுள்ளார். இத்தொழில்நுட்ப பயிற்சிப்பட்டறையில் விவசாயிகள் மற்றும் விவசாய ஆர்வலர்களை கலந்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.