யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் தொழுகை நேரத்தின்போது வாளுடன் சென்றவரால் பரபரப்பு!
Share
கடந்த 9ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நேரத்தின் போது, வாள் முனையில் ஒருவரை துரத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பாட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஓட்டுமடம் சந்தியில் இருந்து வட்டுக்கோட்டை செல்கின்ற வழியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கட்கிழமை அன்றையதினம் தொழுகை இடம்பெற்றது.
இதன்போது வாளேந்திய நபர் ஒருவர் இன்னொரு இளைஞரை துரத்திக்கொண்டு சென்றவேளை குறித்த இளைஞன் பள்ளிவாசலுக்குள் புகுந்து, பின்னர் அங்குள்ள மதிலால் ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
இதன்போது வாளுடன் வந்த சந்தேகநபர், பள்ளிவாசலில் இருந்த இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, வாள் பறிமுதல் செய்யப்பட்டது. திடீரென வாளினை கொண்டுவந்த குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.




















